
மதுரையில் கமல் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார் என்று பரபரப்பாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தது. அதேநேரத்தில் கமலும் சிவகார்த்திகேயனும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பினர்.
இருவரும் தனியாகப் பேசிய நேரத்தில், நடந்த நிகழ்வு பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டாராம் கமல். சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகப் பேசியதோடு, சென்னை வந்ததும், மதுரையில் சிவகார்த்திகேயனைத் தாக்க முற்பட்டது யார் என்பதை உடனடியாக விசாரித்து என்னிடம் சொல்லுங்கள் என்று கடுமையாக உத்தரவிட்டிருக்கிறாராம் கமல்.
அவருடைய ரசிகர்மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால் கண்டிப்பாக அவர்கள் மேல் கமலே நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லுகிறார்கள்.





