9 வயதுச் சிறுமிக்கு ஆபாசப் படம் காண்மித்த இளைஞனுக்கு விளக்கமறியல்!!

581

Mov

ஒன்பது வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படக் காட்சிகளைக் காண்பித்த இளைஞனை கண்டி நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். கண்டி அங்கும்புர பொலிஸ் பிரதேசத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுமியின் வீட்டிற்கு அருகில் சிறுமியை (9 வயது) அழைத்து சென்று அயல் வீட்டு இளைஞன் ஒருவர் கையடக்க தொலைபேசி மூலம் ஆபாசப் படக் காட்சிகளை காண்பித்துக் கொண்டிருப்பதை அயலவர்கள் சிலர் அவதானித்துள்ளனர்.

இவர்கள் உடனடியாக அங்கும்புர பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு விரைந்து பொலிஸார் குறிப்பிட்ட (26 வயது) இளைஞனை கைது செய்து கையடக்க தொலைபேசியையும் கைப்பற்றி பரிசீலித்தப் பின்னர் இளைஞனை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

நீதவான் சந்தேக நபரான இளைஞனை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வை க்க உத்தரவிட்டார். –