கொள்ளுப்பிட்டியில் ஹோட்டல் அறையில் இருந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு!!

597

Body

கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி குறித்த ஹோட்டலுக்கு வருகைதந்த 27 வயதான அவுஸ்திரேலிய பிரஜையே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அவுஸ்திரேலியப் பிரஜை தொடர்பில் தகவல்கள் கிடைக்காத நிலையில் அறைக் கதவு உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது சடலம் கட்டிலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.