வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதேவி!!

484

sridevi_jhanvi_600x450

ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க துல்கர் சல்மான் ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. இதற்கு நடிகை ஸ்ரீதேவி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, எனது மகள் ரொம்பவும் சின்ன பெண். அவள் இப்போதுதான் படிப்பை முடித்து இருக்கிறாள். அவள் சினிமாவுக்கு வருவது பற்றி எந்த திட்டமும் போடவில்லை. நானே சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்து பார்க்கவில்லை. என்றாலும், இங்கு வந்திருக்கிறேன். அதேபோல், அவள் சினிமாவுக்கு வருவாளா? என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஸ்ரீதேவி கூறுவதை பார்த்தால், ஜான்வி, மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. பல்வேறு நடிகர், நடிகைகளை தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகம் செய்த மணிரத்னம், ஸ்ரீதேவி மகளையும் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.

இருப்பினும், தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடி தேடும் படலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.