கொடதெனியாவை சிறுமி கொலை : சந்தேநபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!!

1226

Sirumi

கொடதெனியாவையில் சிறுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா , பேமுல்ல பிரதேசத்தில் கைதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

‘கொண்டயா’ என அழைக்கப்படும் 32 வயதான துனேஷ் பிரியசாந்த என்ற அந்நபர் கொலையை எவ்வாறு புரிந்தார் என்பது தொடர்பில் பொலிஸாருக்கு அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று வீட்டின் முன் கதவு திறந்திருந்ததாகவும் அதனூடாகவே உள்ளே நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுமி உறங்கிக்கொண்டிருந்த அறையின் ஜன்னல் திறந்திருந்தபோதும் அதனூடாக குதிக்க முடியாத காரணத்தினால் கதவின் வழியே நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.

கதவின் பிடியை சுழற்றியதுமே அது திறந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலைசெய்த தாக தெரிவித்துள்ள அவர் சடலத்தை ஓடையின் அருகில் மறைத்து வைத்ததாகவும் பின்னர் இங்கம்மாறுவை பிரதேசத்தில் உள்ள சகோதரியின் வீட்டுக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் தன்னைப்பற்றிய பல தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.