சிறுமி கொலைச் சம்பவம்; கொட்டதெனியாவ பகுதியில் பொலிஸ் குவிப்பு!!

678

1473322313Child

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சிகளை பதிவு செய்து கொள்வதற்காக சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சந்தேக நபரை அழைத்து செல்வதில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகவே சந்தேகநபரை அழைத்து செல்லவில்லை என்று கொட்டதெனியாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை சம்ப இடத்திற்கு அழைத்துச் செல்ல இருப்பதை அறிந்த பிரதேசவாசிகள் அங்கு கூடியிருப்பதாக எமது அததெரண செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படைப்பிரிவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமி கொலைச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.