பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயா செதெவ்மியின் படுகொலையைக் கண்டித்து இன்று (26.09.2015) காலை 10 மணியளவில் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வவுனியா வர்த்தகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்த முடியாது என வவுனியா பொலிசார் தெரிவித்ததாகவும் அதனால் இக் கவனயீர்ப்புப் போராட்டம் கைவிடப்படுவதாகவும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்தார்.
கவனயீர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளது.







