அறிக்கையை ஏற்றால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும்!!

487

tissa-vitharana_1ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணைக்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்ள லங்கா சம­ச­மாஜக் கட்சி, அறிக்­கையை நிரா­க­ரிப்­ப­தா­கவும் அதனை ஏற்றுக் கொண்டால் நாடு பயங்­க­ர­மான விளை­வு­களை சந்­திக்க நேரிடும் என்றும் அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி, பாது­காப்பு செய­லாளர் படை அதி­கா­ரி­களை இலக்கு வைத்தே இவ்­வ­றிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது என்றும் அக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக முன்னாள் அமைச்­சரும் லங்கா சம­ச­மாஜக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என்­பதும் எமது நிலைப்­பா­டாகும். அதற்­காக இன மத பேதங்­களை மறந்து அனை­வரும் ஒன்­றுப்­பட வேண்டும். யுத்தக் குற்றச் சாட்­டுக்­களில் சிக்கிக் கொண்­ட­வர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை எம்மால் மேற்­கொள்ள முடியும். இதற்கும் சர்­வ­தேச உதவி தேவை­யென்றால் அதனை நாமே கோர வேண்டும் ஆனால் சர்­வ­தேசம் பலாத்­கா­ர­மாக தலை­யிட முடி­யாது.

ஐ.நாவின் அறிக்­கை­யையும் அதி­லுள்ள விட­யங்­க­ளையும் நாம் நிரா­க­ரிக்­கின்றோம்.இவ்­வ­றிக்­கையில் குற்­றச்­சாட்­டுக்கள் மிகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் உள்­ளக விசா­ர­ணைக்குள் தலை­யிடும் வாய்ப்பை சர்­வ­தேசம் ஏற்­ப­டுத்திக் கொண்­டுள்­ளது.எமது நாட்டில் திற­மை­யான நேர்­மை­யான நீதி­ப­திகள் வழங்­க­றி­ஞர்கள் உள்­ளனர்.

உலகின் பல நாடு­களில் எமது நீதித்­து­றை­யி­ன­ருக்கு வர­வேற்பு உள்­ளது. எமது நாட்டின் நடந்­தது என்ன. இதற்­காக என்ன செய்ய வேண்டும் என்­பது தொடர்பில் நல்­லி­ணக்க ஆணைக்­குழு பரிந்­து­ரை­களை வழங்­கி­யுள்­ளது. சர்­வ­தேச சமூகம் எனக் கூறிக் கொள்­வோரும் இதனை ஏற்றுக் கொண்­டுள்­ளனர்.

அத்­தோடு டிஜிட்டல் தொழில்­நுட்பம் தொடர்­பாக “நெவாட்டில் ” ஏற்றுக் கொள்­ளப்­பட்ட அமெ­ரிக்க பேரா­சி­ரி­ய­ரொ­ருவர் ” சனல் 4″ வீடியோ பொய்­யா­ன­தென்றும் தெரி­வித்­துள்ளார்.நல்­லி­ணக்க ஆணைக்­குழு அறிக்­கையில் 104 பக்­கங்­களில் சாட்­சி­யங்கள் வழங்க ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்கும் மனித உரி­மைகள் ஆணைக்­குழு அறிக்­கையில் உரிய இடம் வழங்­கப்­ப­ட­வில்லை.

யுத்­தத்தில் ஒருவர் மர­ணிக்கும் போது 4 பேருக்கு மேல­தி­க­மானோர் காய­ம­டை­கின்­றார்கள் என சர்­வ­தேச ரீதி­யாக ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. எனவே ஐ.நா. அறிக்­கையில் இறு­திக்­கட்ட யுத்­தத்தில் 40000 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் எனத் தெரி­வித்­துள்­ளமை உண்­மை­யெனில் காய­ம­டைந்தோர் எண்­ணிக்கை 160000 200000க்கும் இடை­யே­யான தொகை­யாக இருந்­தி­ருக்க வேண்டும்.

போது­மா­ன­ளவு சாட்­சி­யங்கள் இல்­லா­மையால் அறிக்­கையில் பெயர்கள் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத­பாய ராஜ­பக்ஷ உட்­பட இரா­ணுவத் தள­பதி தெரிவு செய்­யப்­பட்ட படை அதி­கா­ரி­களை இலக்கு வைத்தே இவ் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­காக பொய்­யான தக­வல்­க­ளையும் சாட்­சி­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யுள்­ளது.

இவ்­வாறு பொய்­யான அறிக்கை வெளி­யி­டப்­பட்­டாலும் ஐ.நா பாது­காப்புச் சபையில் அங்கம் வகிக்கும் சீனா, ரஷ்யா நாடுகள் எமது நாட்­டுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்­காது. ஆனால் இது சர்வதேச யுத்த நீதிமன்ற பொறிமுறைக்கு அடித்தளமாக அமையும் ஐ.நா.வின் கலப்பு நீதிமன்ற பொறிமுறை சட்ட ரீதியான வரையறைக்குள் உள்ளடங்காது.
எனவே எந்தவொரு நிலையிலும் அழுத்தங்களுக்கு அடிபணியாது. நாட்டின் சுதந்திரமும் இறையாண்மை மற்றும் நற்பெயரை பாதுகாக்கும் விதத்தில் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.