மக்கா யாத்திரிகர்களின் பாதுகாப்பு தொடர்பான மறுபரிசீலனைக்கு சவூதி மன்னர் உத்தரவு!!

525

3C3902C5-CCB5-44BE-A481-195C05274284_mw1024_s_nசவூதி அரே­பி­யாவில் புனித நக­ரான மக்­கா­வுக்கு அருகிலுள்ள மினா நகரில் இடம்­பெற்ற சன­நெ­ருக்­க­டியில் சிக்கி 717 பேர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து யாத்­தி­ரி­கர்­க­ளுக்கான பாது­காப்பு தொடர்­பான மீள்பரி­சீ­ல­னை­யொன்­றுக்கு அந்­நாட்டு மன்னர் சல்மான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

மேற்­படி சன­நெ­ருக்­கடி அனர்த்­தத்தில் சிக்கி 863 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். இறுதி ஹஜ் மத வைப­வ­மொன்றில் சுமார் இரு மில்­லியன் மக்கள் பங்­கேற்­றி­ருந்த வேளை­யி­லேயே இந்த சன­நெ­ருக்­கடி அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த 25 வருட காலப் பகு­தியில் யாத்­திரை காலத்தில் இடம்­பெற்ற மிக மோச­மான சம்­ப­வ­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது. யாத்­தி­ரி­கர்­களின் நகர்வின் ஏற்­பாடு மற்றும் முகாமை மட்­டத்­தில் அபி­வி­ருத்தி தேவை­யா­க­வுள்­ள­தாக மன்னர் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் மேற்­படி சன­நெ­ருக்­கடி அனர்த்தம் குறித்து விசா­ரணை செய்­வ­தற்கு சவூதி அர­சாங்­கத்தால் ஆணை­ய­க­மொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. அதி­கா­ரி­களால் நிர்­ண­யிக்­கப்­பட்ட நேர அட்­ட­வணைக்கு கௌர­வ­ம­ளிக்­காது பெருந் ­தொ­கை­யான யாத்­தி­ரி­கர்கள் ஒரே­ச­ம­யத்தில் புறப்­பட்­டமை கார­ண­மா­கவே இந்த சன­ நெ­ருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பிய சுகா­தார அமைச்சர் தெரி­வித்தார்.

இது கடந்த இரு வார காலப் பகு­தியில் மக்­காவில் யாத்­தி­ரி­கர்கள் தொடர்பில் இடம்­பெற்ற இரண்­டா­வது அனர்த்­த­மாகும். மக்காவில் விஸ்தரிப்பு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாரந்தூக்கி உபகரணமொன்று சரிந்து விழுந்ததால் இடம்பெற்ற முதலாவது அனர்த்தத்தில் 109 பேர் பலியாகியிருந்தனர்.