பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் டொமினிகா சிபுல்கோவா கால் இறுதிக்கு முன்னேறினார். ஜப்பானின் டோக்கியோவில் முன்னணி வீராங்கனைகள் மோதும் பான் பசிபிக் ஓபன் டென் னிஸ் தொடர் நடக்கிறது.
இதில் நடந்த ஒற்றை யர் பிரிவு 2ஆம் சுற்றுப் போட்டி யில் சுலோவாகியாவின் டொமினிகா சிபுல் கோவா, 6ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்லா நவர்ரோவாவை எதிர்த்து விளையாடினார். அபாரமாக ஆடிய சிபுல்கோவா 6-–4, 6–-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் செர்பியாவின் அன்னா இவானோவிச், போலந்தின் ரத்வன்ஸ்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.





