
நாடுமுழுவதும் நேற்று நள்ளிரவிலும் அதிகாலை வேளையிலும் திடீர் மின்சாரத் தடைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்திருந்தனர்.
பல மணித்தியாலங்கள் இத்தடை நீடித்திருந்தது. இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்யுமாறு மின்சாரத்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் இன்று ஆரம்பிக்கும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த மின்சார தடை தற்போது சீராக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





