வவுனியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கூரைத் தகரம் வழங்கிய வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா!!

1788

வவுனியா மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கூரை தகரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 23.09.2015 அன்று காலை 10.00 மணிக்கு உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் வடமாகாண சபை உறுப்பினரின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கூரைத் தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சக மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தகரம் வழங்கல்  (8) தகரம் வழங்கல்  (11) தகரம் வழங்கல்  (12) தகரம் வழங்கல்  (20) தகரம் வழங்கல்  (21) தகரம் வழங்கல்  (27)