மீண்டும் பட்டம் வென்ற சானியாஜோடி!!

482

sania-mirza

சீனாவில் இடம்பெற்ற குவாங்சோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி வெற்றி பெற்று சம்­பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதன் பெண்கள் இரட்­டையர் பிரிவில் முதல்­தர ஜோடி­யான இந்­தி­யாவின் சானியா– சுவிட்­ஸர்­லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி இறுதிப் போட்­டியில் சொந்த நாட்டு அணி­யான சீனாவின் ஷிலின் – ஜூ- ஷியா­யோடி யூ ஜோடியை எதிர்­கொண்­டது.

இதில் சானியா ஜோடி 6-–3, 6-–1 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்­பியன் பட்டம் வென்­றது.

சீன ஜோடி முதல் செட்டில் சானியா ஜோடிக்கு சற்று சவால் விடுத்து விளை­யா­டி­யது.

இருந்­தாலும் சானியா ஜோடிக்கு அவர்­களால் ஈடு­கொ­டுக்க முடி­யாமல் 3–-6 என இழந்­தது. ஆனால், 2-ஆவது செட்டில் 1-–6 என எளிதில் சர­ண­டைந்­தது. இதனால் சானியா ஜோடி வெற்றி பெற்று சம்­பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.