சுசந்திகாவின் புதிய அத்தியாயம்!!

477

00000897-photoஒலிம்­பிக்கில் பதக்கம் வென்று இலங்­கைக்கு பெருமை தேடிக்­கொ­டுத்த முன்னாள் தட­கள வீராங்­க­னை­யான சுசந்­திகா ஜய­சிங்க புதிய அத்­தி­யாயம் ஒன்றை ஆரம்­பித்­துள்ளார்.

இலங்­கையின் முன்னாள் தட­கள வீராங்­க­னை­யான சுசந்திகா ஜய­சிங்க கடந்த 2000 ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகரில் நடை­பெற்ற ஒலிம்பிக் போட்­டியின் பெண்­க­ளுக்­கான 200 மீற்றர் போட்­டியில் வெள்ளிப் பதக்கம் வென்று 15 வரு­டங்கள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டு தட­கள வீர வீராங்­க­னை­க­ளுக்­கான சகல வச­தி­க­ளையும் பெற்­றுக்­கொ­டுக்கக் கூடிய பயிற்சி நிலை­ய­மொன்றை ஆரம்பிக்­க­வுள்ளார்.

தட­கள வீர வீராங்­கனை­க­ளுக்கு பயிற்­சி­க­ளையும், கற்றல் நட­வ­டிக்­கை­க­ளையும் இல­வ­ச­மாகப் பெற்­றுக்­கொ­டுப்­பதே தனது பிர­தான இலக்கு என சுசந்­திகா ஜய­சிங்க குறிப்­பி­ட்டுள்ளார்.

எதிர்­வரும் ஒக்­டோபர் 7 ஆம் திக­தி­யன்று நடை­பெறும் இந்­நி­கழ்­வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொள்ளும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­படி பயிற்சி நிலை­யத்தை திறந்து வைக்­க­வுள்ளார்.

இந்­நி­கழ்­வுக்கு சிறப்பு விருந்­தி­ன­ராக சுசந்­திக்கா ஜய­சிங்­கவின் முன்னாள் முகா­மை­யா­ள­ரா­கவும், பயிற்­று­ந­ரா­கவும் செயற்­பட்ட அமெ­ரிக்க நாட்­ட­வ­ரான டோனி கெம்பல் கலந்­து­கொள்­ள­வுள்ளார். மேலும், இந்­நி­கழ்­வுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முன்னணி பயிற்றுநர்