வவுனியாவில் பின்தங்கிய நிலையில் இருந்தும் மாகாணத்தில் சாதித்த சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம்!!

744

வவுனியாவில் பின்தங்கிய பாடசாலையான வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலம் 2015 ஆம் ஆண்டுக்கான கணித நாடகப் போட்டி சிரேஸ்ட பிரிவில் வடமாகாணத்தில் சாதனை படைந்துள்ளது.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2015 ஆம் ஆண்டுக்கான கணித நாடகப் போட்டி கடந்த சனிக்கிழமை யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் வடமாகாணத்தை சேர்ந்த 11 வலயங்களிலும் முதலிடம் பெற்ற பாடசாலைகளுடன் போட்டியிட்டு முதன் முதலாக மாகாண மட்டத்தில் வெற்றியை பதிவு செய்தது. பல நகரப் பாடசாலைகளுடன் போட்டியிட்ட இந்த பாடசாலை மாணவர்கள் 3 ஆம் இடத்தைப் பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

இதேவேளை, குறித்த போட்டியில் சாவகச்சேரி டிபேக் கல்லூரி முதலாம் இடத்தையும், வெள்ளாங்குளம் அ.த.க பாடசாலை இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தது.

இதேவேளை, வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தின் இவ் கணித நாடகத்தை சிரேஸ்ட கணித ஆசான் ல.சதீஸ்குமார் இயக்கி இருந்தமையும், இவ் நாடகத்தின் கணித எண்ணக்கரு அனைவரதும் பாராட்டைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1a IMG_0118