அப்படி நினைக்கவே இல்லையாம் சமந்தா!!

469

Samantha

யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் 24 படத்தை சூர்யாவை வைத்து எடுத்து வருகிறார். சமந்தா நாயகியாக நடிக்கிறார். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தெலுங்கு உரிமையை நிதின் என்பவருடன் இணைந்து சமந்தா வாங்கியுள்ளார் என வதந்தி பரவியது.

குறித்த செய்தி சமந்தாவையும் எட்டியது. படங்களை தயாரிப்பது குறித்தோ, வெளியிடுவது குறித்தோ நான் இதுவரை சிந்தித்ததே இல்லை. அப்படி நான் நினைத்ததே இல்லை. அப்படியிருக்க இந்த மாதிரி எல்லாம் எப்படி எழுதுகிறார்களோ தெரியவில்லை என கூறுகின்றார் சமந்தா.