வவுனியாவில் வர்த்தக நிலையத்தை உடைத்து திருடியவர்கள் இவர்கள்தான் : CCTV காணொளி!(படங்கள்)

694

வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள பிரபல மோட்டர் வாகன உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் நேற்று இரவு துணிகர திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு வியாபார நடவடிக்கையில் முடிவடைந்து கடையை பூட்டிவிட்டு வீடு சென்ற உரிமையாளர் இன்று காலை 8 மணிக்கு கடையை திறப்பதற்காக வந்த போது கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

கடையின் முன்பக்க வாயில் கதவின் 8 பூட்டுக்களையும் உடைத்து உள்நுழைந்த திருடர்கள் கடையில் உள்ள பணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த வர்த்தக நிலையத்திற்கு அருகில் இருந்த இரண்டு வியாபார நிலையங்களில் இந்து எடுக்கப்பட்ட சீசீடிவி காணொளி வெளியாகியுள்ளது. இதில் திருடர்கள் கடைகளின் பூட்டை உடைப்பது மிகத் தெளிவாக பதிவாகியுள்ளது.

இக் காணொளியை வைத்து திருடர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் வவுனியா பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்தி  வவுனியாவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு பலலட்சம் ரூபாய் கொள்ளை!!(படங்கள்)

  20150929_122150 20150929_122152 20150929_122158 20150929_122213 20150929_122226 20150929_122238 20150929_122245 20150929_122312 20150929_122518 20150929_122523 20150929_12253820150928_23200520150928_232008