காணாமல் போனோருக்கு சான்றிதழ் வழங்குவதற்கு சந்திரிகா வரவேற்பு !!

764

chandrika_bandaranayakeகாணாமல் போன­வர்­க­ளுக்கு சான்­றிதழ் வழங்­கு­வது தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள செயற்­பா­டா­னது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தென முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.நீண்­ட­கா­ல­மாக காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்கள் தொடர்ச்­சி­யாக தமது உற­வுகள் தொடர்­பாக பல்­வேறு போராட்­டங்­களை நாட­ளாவிய ரீதியில் மேற்­கொண்டு வந்­த­துடன் அர­சாங்­கத்­தி­டமும் தொடர்ச்­சி­யாக அழுத்­த­மாக கோரிக்கை விடுத்து வந்­தனர்.

இந்­நி­லையில் காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான சான்­றி­தழ்கள் வழங்­கப்­பட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென உள்­வி­வ­கார அமைச்சு அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­தினை சமர்ப்­பித்து அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றி­ருந்­தது.

தமது உற­வினர் உயி­ரி­ழக்­க­வில்லை என ஏற்­றுக்­கொள்ள மறு­த­லிப்­போ­ருக்கு இந்த விசேட சான்­றிதழ் வழங்­கப்­பட உள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் தேசிய ஐக்­கியம் மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான நிறுவனத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.