வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர் கௌரவிப்பு!!(படங்கள்)

1360

அண்மையில் தேசிய ரீதியில் இடம்பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (30.09.2015) காலை பிரார்த்தனையின் போது கல்லூரி அதிபர் மரியநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் தேசிய ரீதியில் இடம்பெற்ற பளு தூக்கும் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுக்கொண்ட மாணவர்களும் தேசியரீதியில்இடம்பெற்ற தமிழ்த்தின நிகழ்வில் கலந்து கொண்டு குழு நடனத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களும் மற்றும் தேசிய ரீதியில் இடம்பெற்ற போட்டியில் பாஓதலில் முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்ட மாணவர்களும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் கலந்து கொண்டு கௌரவித்தனர்.

அத்துடன் மேற்படி போட்டிகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்திய ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கபட்டது.

12033091_10153138513566088_237926757574588186_n 12033152_10153138478131088_6549442002735517106_n 12039266_10153138478041088_1388891548310085984_n 12039600_10153138513661088_6241595569964894118_n 12043218_10153138477921088_4351384366969767347_n 12046588_10153138478221088_1854051269484545911_n 12065501_10153138477766088_5376710492632931723_n (1) 12065501_10153138477766088_5376710492632931723_n 12087306_10153138477721088_5483268049231379536_o 12096231_10153138477841088_8390438878056547076_n