மல்லாவியில் நடந்த கோர விபத்தில் 40 பேர் படுகாயம்!!(படங்கள்)

900

முல்லைத்தீவு மல்லாவி ஒட்டறுத்த குளப்பகுதியில் நேற்று(30.09.2015) இரவு இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து மல்லாவி நோக்கி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற பேரூந்தும், மல்லாவியில் இருந்து நட்டான்கண்டல் நோக்கி சென்ற பேரூந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளதுடனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பயணித்த சுமார் 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேரூந்துகளே இவ்வாறு மோதியுள்ளதாகவும் காயமடைந்தவர்களை நோயாளர் காவு வண்டியினூடாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதடன் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

12041917_409671712559483_702738467_n 12042140_409671792559475_1791164905_n 12042207_409667249226596_1348651620_n 12048805_409671692559485_612733824_n 12064074_409671759226145_884261352_n 12077455_409667299226591_1215594858_n 12080937_409667315893256_1952459125_n 12081326_409671672559487_1373923812_n 12083632_409667325893255_1112164698_n (1) 12083632_409667325893255_1112164698_n 12083824_409671732559481_537365744_n 12086845_409671772559477_2060265993_n 12087513_409671785892809_1657939883_n 12092145_409667309226590_491927410_n 12092248_409671705892817_384904207_n