பிரதமர் நாளை ஜப்பான் விஜயம்!!

891

1 (4)பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை சனிக்­கி­ழமை ஜப்­பா­னுக்­கான 5 நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­கிறார்.ஜப்­பா­னிய பிர­தமர் ஷின்சோ அபேயின் அழைப்பை ஏற்ற பிர­தமர் நாளை ஜப்­பா­னுக்கு செல்­கிறார்.

நாளை ஜப்­பா­னுக்­கான விஜ­யத்தை மேற்­கொள்ளும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜப்­பானின் “கியோதோ” நகரில் நடை­பெ­ற­வுள்ள விஞ்­ஞான மற்றும் தொழில்­நுட்ப சங்­கத்தின் வரு­டாந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்­வ­தோடு, அங்கு விசேட சொற்­பொ­ழி­வொன்றை நடத்­து­கின்றார்.

இச் சங்­கத்தின் கௌரவ தலை­மைப்­ப­த­வியை ஜப்­பா­னிய பிர­தமர் ஷின்சோ அபே வகிப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.