சிவில் பாதுகாப்புக்குழு, பொதுமக்கள் மற்றும் வவுனியா பொலிசார் இணைந்து மேற்கொண்ட சிறுவர்களின் மீதான குற்றச்செயல் மற்றும் துஸ்பிரயோகங்களை தடுக்கும் விழிப்புணர்வுப் பேரணி இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வுப் பேரணியானது வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி கண்டி பிரதான வீதி வழியாக பஜார் வீதி, வவுனியா பேரூந்து நிலையம் ஊடாகச் சென்று மறுபடியும் வவுனியா பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது.
இந்நிகழ்வில் வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரி சன்ன அபேரத்தின, மற்றும் சிவில் பாதுகாப்புக்குழுக்களின் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






