வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!!(படங்கள்)

922

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து 2கிலோ 250கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா கஞ்சா தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கடந்த 29.09.2015 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பிற்பகல் 12 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து அக்கறைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்தில் மறைத்து வைக்கப்பட்ட 2கிலோ 250கிராம் கொண்ட கேரள கஞ்சா பொதியினை வவுனியா கஞ்சா தடுப்புப் பிரிவினர் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து கைப்பற்றியதுடன் அதை கொண்டு சென்ற 26, 28 வயதுடைய இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட கஞ்சா தடுப்பு உதவி பொலிஸ் அதிகாரி எஸ்.ஜ.றுவான் றணசிங்க தலைமையில் எட்டுப்பேர் கொண்ட குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நாளை (05.10.2015) வவுனியா நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

20150930_091243 20150930_091255 OLYMPUS DIGITAL CAMERA