
இந்து சமுத்திரத்தின் சமாதானத்தை பாதுகாப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் உறுதுணையாக இருந்து செயற்படும் என ஜப்பான் பிரதமர் சின்சிரோ அபே தெரிவித்தார்.
1952 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜப்பானுக்கு ஆதரவாக செயற்பட்டு கருத்து தெரிவித்தமையை எமது மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் மறக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கத்தின் புதிய கல்வி துறை சார்ந்த பயணத்திற்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஐப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்வை நேற்று கியுத்தோ நகர சர்வதேச மாநாட்டு கேந்திர நிலையத்தில் வைத்து சந்தித்த போதே ஐப்பான் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மேலும் கருத்து பரிமாறுகையில்,
இலங்கைக்கு முதலாவது சுற்றுலா மேற்கொண்ட ஐப்பானியர் எனது பாட்டனாராவார். அந்த உரிமையை மையமாக கொண்டு இலங்கையுடன் நட்புறவினை தொடர்ந்தும் செயற்படுத்த எனது அரசாங்கம் எதிர்பார்துள்ளது. தென் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஆசிய வலயத்தில் வளர்ச்சியின் கேந்திரமாக அமையும் என்று எதிர்பார்கின்றேன்.
இதன்போது தொழில்நுட்பம்இ பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் அதிகளவில் கவனம் செலுத்தப்படும். 1952 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஐப்பானுக்கு ஆதரவாக செயற்பட்டு கருத்து தெரிவித்தமையை எமது மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் மறக்க மாட்டார்கள்.
இந்த உதவியை கருத்திற் கொண்டு இந்து சமூத்திரத்தின் சமாதானத்தை பாதுகாப்பதற்கு ஐப்பான் அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் உறுதுணையாக இருந்து செயற்படும். மேலும் இலங்கை அரசாங்கத்தின் புதிய கல்வி துறை சார்ந்த பயணத்திற்கு ஐப்பான் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.





