தன் ரகசியத்தை அம்பலப்படுத்தினார் ஸ்ரீதேவி!!

422

sridevi_story_350_072814051104தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தன் வெற்றிக் கொடியை நாட்டிய நடிகை ஸ்ரீதேவி புலி படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகியிருக்கிறார்.

அதுவும் வித்தியாசமான வில்லியாக. வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் குறையல என ஸ்ரீதேவியைப் பார்த்து சொன்னால் நிச்சயம் பொருந்தும். அந்தளவிற்கு இரண்டு டீன் ஏஜ் பெண்களின் தாய் என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு அழகாக மிளிர்கிறார். ஸ்ரீதேவி என்றும் இளமையாக தோன்ற சில காரணங்களைப் பட்டியலிடுகிறார்.

உணவு எடுத்துக் கொள்ளும் போது சாய்ஞ்சு உட்கார்ந்து காலை நீட்டிக்கிட்டு டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுகிற பழக்கம் ஸ்ரீதேவிக்கு கிடையாதாம். இதனால், அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் சாப்பிட்டு விடும் அபாயம் உள்ளது.

நேரத்துக்குச் சரியாகச் சாப்பிட்டு விடுவாராம் ஸ்ரீதேவி. அதோடு கண்டதையும் சாப்பிடும் பழக்கம் கிடையவே கிடையாதாம்.

நாள்முழுவதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாராம் ஸ்ரீதேவி. நாள் முழுக்க அதே எனர்ஜியுடம் செயல்படுவாராம்.

இது எல்லாவற்றையும் விட முக்கியமானது மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வாராம். இதெல்லாம் கூட தன் அழகின் ரகசியமாக இருக்கலாம் என்கிறார் ஸ்ரீதேவி.