வவுனியா நோக்கி பயணித்த பேரூந்து விபத்து : 15 பேர் காயம்!!(படங்கள்)

1281

மதவாச்சி, பூனாவ பகுதியில் விமானப்படை மற்றும் இ.போ.சபை பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற விமானப்படைக்குச் சொந்தமான பேரூந்தும், கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தும் மதவாச்சி, பூனாவ பகுதியில் ஏ9 வீதியில் இன்று காலை நேருக்கு நேர் மோதி தடம்புரண்டது.

இதன் காரணமாக இலங்கைப் போக்குவரத்துச் சபை பேரூந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்த நிலையில் மதவாச்சி, வவுனியா, அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC_0210 DSC_0211 DSC_0212 DSC_0213 DSC_0215 DSC_0226 DSC_0230 DSC_0232 DSC_0233 DSC_0235 DSC_0242 DSC_0244 DSC_0252 DSC_0253 new new2 new3 new4