கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 576 ஏக்கர் காணிகள் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
கிளிநொச்சிஇ இரணைமடு பிரதேசத்தில் இடம் பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016 – 2018 இன் ஆரம்ப நிகழ்வின் போதே காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டம் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 437 ஏக்கர் நிலமும்இ முல்லைத்தீவு மாவட்டத்தில் 139 ஏக்கர் நிலமும் ஜனாதிபதியால் நேற்று மக்களிடம் வழங்கப்பட்டன.





