துருக்கி வான்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் பறப்பதற்கு துருக்கி மற்றும் நேட்டோ நாடுகள் கண்டனம் வௌியிட்டுள்ளன. சனிக்கிழமையன்று சிரியாவின் எல்லைப் பகுதியில் துருக்கியின் வான் பரப்பில் ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக துருக்கி தெரிவித்துள்ளது.
இதனையடுத்து துருக்கு வௌியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யாவின் வௌியுறவு அமைச்சரை தொடர்புகொண்டு கண்டனம் வௌியிட்டுள்ளார். இனிமேல் இப்படியான அத்துமீறல்கள் நடந்தால் அதற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டிவரும்’ என்று துருக்கு வௌியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் துருக்கி வான்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் நுழைவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நேட்டோ தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பசர் அல் அசாத்தின் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிற நிலையில் கிளர்ச்சி படையினருக்கு நேட்டோ நாடுகள் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





