ஹர்பஜன்சிங்குக்கு இரண்டாந் திருமணம்!!

625

Harbhajan-Singh_2இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங். 35 வயதான இவர் தனது 2–வது இன்னிங்சை விரைவில் தொடங்க இருக்கிறார்.ஹர்பஜன்சிங் நடிகை கீதா பஸ்ராவை நீண்டகாலமாக காதலித்து வந்தார். இந்த காதல் ஜோடி இந்த மாதம் இறுதியில் திருமணம் செய்ய போவதாகவும், இதற்காக விஷேச திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ஹர்பஜன்–கீதா பஸ்ரா திருமண தேதி வெளியாகி உள்ளது. வருகிற 29–ந்தேதி திருமணம் நடக்கிறது. இதை ஆடை அலங்கார நிபுணர் ஏ.டி.சிங் டூவிட்டரில் திருமண இதழுடன் வெளியிட்டு உள்ளார்.

ஹர்பஜன் சொந்த ஊரான ஜலந்தாரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்ஹராவில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடக்கிறது.