அமேய்க தென் கரோலினா பிராந்தியத்தில் வரலாறு காணாத வெள்ளம்- 6 பேர் பலி!!

1085

chehalis-flood-12607-001அமெ­ரிக்க தென் கரோ­லி­னாவில் இடம்­பெற்ற பாரிய வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது 6 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.மேற்­படி மழை வீழ்ச்சியா­னது அந்தப் பிராந்­தி­யத்தில் கடந்த 1000 வரு­டங்­களில் இல்­லாத மோச­மான மழை­வீழ்ச்சி என தென் கரோ­லினா ஆளுநர் நிக்கி ஹேலி தெரி­வித்­துள்ளார்.கரி­பிய பிராந்­தி­யத்தை தாக்­கிய ஜோக்கின் சூறா­வளி கார­ண­மா­கவே இந்த அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் அமெ­ரிக்க ஜனா ­தி­பதி பராக் ஒபாமா இந்த வெள்ள அனர்த்­தத்­தை­யொட்டி அந்தப் பிராந்­தி­யத்தில் அவ­ச­ர­கால நிலை ­மை­யொன்றை பிர­கடனப்­படுத்­தி­யுள்ளார். வெள்ளத்தில் சிக்­கி­ யி­ருந்த சுமார் 100 பேர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள் ளனர்.