இன்று வெளியான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவர்கள் 76 பேர் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.
இதில் மாவட்டத்தில் முதல் 10 நிலைகளில் இப் பாடசாலை மாணவர்கள் 7 பேர் இடம்பெறுகின்றனர். முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளையும் இப்பாடசாலையே பெற்றுள்ளது.
அந்தவகையில், முதலாம் நிலை ஹரிணி பரந்தாமன் (188 புள்ளி), இரண்டாம் நிலை அமல்ராஜ் மதுரன் (187 புள்ளிகள்), மூன்றாம் நிலை கர்ணி சுரேஸ் (186 புள்ளிகள்), நான்காம் நிலை லிங்கநாதன் அகர்ஷன் (185 புள்ளிகள்), ஏழாம் நிலை யேசுநேசன் சதுர்சிகன் மற்றும் பிரணவி சஞ்சீபன் (182 புள்ளிகள்), ஒன்பதாம் நிலை பரமானந்தன் நிகேஷன் (181 புள்ளிகள்) ஆகிய மாணவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.








