வவுனியா வெளிக்குளம் க.உ. வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வும் உப அதிபரின் சேவை நலன் பாராட்டு விழாவும்!!

924

வவுனியா வெளிக்குளம் க.உ வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு அதிபர் திரு.கணேஸ் அவர்களின் தலைமையில் இன்று (07.10.2015) காலை நடைபெற்றது.

இன் நிகழ்வில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பாடசாலையின் உப அதிபர் திருமதி ஸ்ரீ.மகேஸ்வரன் அவர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழா நடைபெற்றது.

வித்தியாலய அதிபர், ஆசிரியர், அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்டு வாத்தியக் குழுவினரால் கௌரவமாக வரவழைக்கப்பட்டு நினைவுப்பரிசுகள், வாழ்த்துமடல்கள், பொன்னாடைகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டு சிறப்புரைகள் இடம்பெற்றன.

Sevainalam (7)  Sevainalam (5)Sevainalam (4)Sevainalam (3)    teacher day teachersdaySAM_0625