
உலகம் இன்று புதன்கிழமையுடன் அழியப்போகிறது என பைபிளில் கூறப்பட்டுள்ளதாக இபைபிள் என்ற கிறிஸ்தவ கூட்டமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.
ஏற்கனவே மாயன் காலண்டரின்படி 2012ம் ஆண்டு உலகம் அழியும் என்று கணிக்கப்பட்டது.
அதன்பின்னர் கடந்த செப்டம்பர் 27ல் தோன்றிய “சூப்பர் மூன்” உதயத்தின்போது உலகம் அழியும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், அப்போது நடக்க தவறிய நிகழ்வு இன்று ஏற்படும் என்று ஃபிலடெல்பியா பைபிள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி அக்டோபர் 7ம் திகதி தான் கடவுள் பேசினார். அன்றைய தினம் உலகம் அழியும்.
அந்த தினத்தில் நிச்சயம் உலகம் அழியும் என்று இபைபிள் என்ற கிறிஸ்தவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.





