கடந்த 10 மாத காலத்தில் 21 381 டெங்கு நோயாளர்கள்!!

448

dengue_storysize_660_112913041732இந்த ஆண்டின் கடந்த 10 மாத காலப்பகுதியில் 21,381 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 50 வீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 6848 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 2973 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறைந்த டெங்கு நோயாளர்கள் அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நுளம்பு பரவும் வகையில் காணப்படும் இடங்களை சுத்திகரிக்கும் நடவடிக்கைகளை வழமை போல் மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.