சீனாவின் கண்ணாடி பாலத்தில் கீறல்- சுற்றுலாப் பயணிகள் பீதி!!

417

Chinas-newly-built-glass-bridge-cracks-causes-panic (1)உலகிலேயே நீளமான, உயரமான சீனாவின் இந்த கண்ணாடி பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் கண்ணாடி பாலத்தைக் கடக்க வந்த சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் யூன்டாய் மலையின் மேல் ஹெனான் என்ற பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் யு வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலத்தில் நடந்த செல்லும்போது, கீழ்ப் பரப்பையும் கண்டு ரசிக்க முடியும்.

இந்த நிலையில், அதிகமான சுற்றுலாப் பயணிகளினால் கண்ணாடி பாதை அடுக்குகளில் கீறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பயணிகளுக்கு தடை விதிக்கபட்டு உள்ளதாகவும் தற்போது கண்ணாடி பாலம் மூடபட்டு பாலத்தை பராமரிக்கும் குழுவினர், கீறலை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் சீன பத்திரிகை தெரிவித்து உள்ளது.