ஊடகவியலாளர்களின் படுகொலை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடித்து தண்டிக்கப்படாத நாடுகள் பட்டியலில் இலங்கை 6-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4-வது இடத்தில் இருந்தது.
ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டிக்கப்படும் சூழல் தொடர்பான சிபிஜே- என்ற இம்முறை
அந்த அறிக்கையின் படி முதலிடத்தில் சோமாலியாவும் இரண்டாவது இடத்தில் ஈராக்கும் உள்ளன. மற்றும் சிரியா மூன்றாவது இடத்திலும் பிலிபைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் இலங்கையைவிட முன்னிலையில் இருக்கின்றன.
கடந்த ஆட்சிக்காலத்தை விட புதிய அரசாங்கத்தினால் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவருவதனால் இலங்கை இந்தமுறை இரண்டு இடங்கள் பின்தள்ளி 6வது இடத்தில் காணப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.