படவிழாவில் கண்ணீர் விட்டு அழுத நடிகர்!!

704

Actor-Prajin

பிரஜன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. இதில் பிரஜனுடன் ரிச்சர்ட், நிஷாந்த் ஆகிய நாயகர்களும், அஸ்மிதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய பிரஜன்,
இந்த படம் வெற்றிப்படமாக ஆகவேண்டும் என்று நான் தினமும் சாமியை கும்பிடுகிறேன். இசை வெளியீட்டு விழா நடத்த சிறப்பு விருந்தினர்களாக வர இருந்த அனைவரிடமும் கேட்டு அவர்கள் சரி என்று சொன்ன பிறகுதான் அவர்கள் பெயர்கள் அழைப்பிதழில் போட்டு அவர்களுக்கு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் விழாவிற்கு யாரும் வரவில்லை.

நான் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படம் என் சினிமா வாழ்கையில் முக்கியமான படம். படத்தின் பாடல்களும் படமும் சிறப்பாக இருக்கும். பாடல்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உங்கள் பாராட்டு எங்களுக்கு வேண்டும் என்றுதான் அழைக்கிறோம் ஆனால் யாருமே வராதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கண்ணீர் விட்டு அழுதார்.



எனது நண்பர்களாக இருக்கும் சில நடிகர்கள் மட்டும் வந்து வாழ்த்தினார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் இதுபோல் நடக்காமல் ஒரு வரைமுறைப்படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொகிறோம் என்று கூறினார்.