கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று இவரைக் கைதுசெய்துள்ளனர்.
முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளுக்காக பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று மாலை அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் இவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் இருவர் கைதாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-அத தெரண தமிழ்-