சிங்கப்பூர் சங்கி விமானநிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படவிருந்த சிங்கப்பூர் எயார் லைன்ஸ் விமானமொன்று அதன் முன் பகுதி நிலத்தில் மோத சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹொங்கொங்கிற்கு புறப்படவிருந்த ஏ330 –-300 விமானமே இவ்வாறு முன்னோக்கி சரிந்துள்ளது.
எனினும் சம்பவம் இடம்பெற்ற போது அந்த விமானத்தில் பொறியியலாளர் ஒரு வர் மட்டுமே இருந்ததாகவும் அதில் பயணிகளோ அன்றி விமான ஊழியர்களோ இருக்கவில்லை எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேற்படி சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.இதனையடுத்து பாரந்தூக்கி உபகரணம் மூலம் அந்த விமானம் நிமிர்த்தப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக அந்த விமானம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பயண நேரத்துக்கு 40 நிமிடம் கழித்து ஹொங்கொங்கிற்கான பயணத்தை மேற் கொண்டது.





