இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்திற்கு பின் ஓய்வு : ரங்கன ஹேரத்!!

368

2Rangana-Herath-l10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு தற்போது இல்லை. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

37 வயதாகும் ஹேரத், இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 278 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார். அதேபோல் 71 ஒரு நாள் போட்டிகளில் 74 விக்கெட்டுக்களையும், 9 இருபதுக்கு 20 போட்டிகளில் 12 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

இவர் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இவர் கூறியது: காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், உடற்தகுதியை சிறப்பாக பராமரிக்க முடியவில்லை. பந்துவீச்சு பற்றி எவ்வித உத்தரவாதமும் என்னால் தர முடியாது.



ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டு, டெஸ்டில் கவனம் செலுத்த உள்ளேன். நடக்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன் என கூறியுள்ளார்.