ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராகவும் வெற்றிபெற்று வருபவர் நட்டி. இவர் சதுரங்க வேட்டை படத்திற்கு பிறகு புலி படத்தில் ஒளிப்பதிவு செய்வதில் பிஸியாக இருந்து வந்தார்.தற்போது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
புதுமுக இயக்குனர் தாஜ் கூறிய ஒற்றை வரி கதை மிகவும் பிடித்துபோக அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நட்டி.பயணக்கதையாக உருவாகும் இப்படத்தில் லட்சுமி ராயை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.