ரூ. 93 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது!!

390

2030185955Untitled-193 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை சாஜா நோக்கி புறப்படவிருந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் வசம் இருந்து 23 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவர் மீகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என, தெரியவந்துள்ளதோடு, விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.