இலங்கை மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட்- இலங்கை துடுப்பாட்டம்!!

524

Sobers-Tissera-Trophyஇலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிரான சோபஸ் – திஸேரா கிண்ணத்திற்கான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது..

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது .

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 இருபதுக்கு – 20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இந்தவகையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமானது.



இப்போட்டியில் இலங்கை அணியில் அறிமுக வீரராக மிலிந்த சிறிவர்தன களமிறங்குகிறார் . இவர் இலங்கை அணியில் 131 ஆவது டெஸ்ட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.