துருக்கியிலிருந்து சட்டவிரோதமாக படகுப் பயணத்தை மேற்கொண்ட சிரியாவைச் சேர்ந்த நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவர், கிரேக்கத் தீவான லெஸ்பொஸ் கடற்கரையில் ஆரோக்கியமான குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
அவர் மேற்படி கடற்கரையை வந்தடைந்து சிறிது நேரத்தில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவருக்கு குழந்தையைப் பிரசவிக்க மருத்துவ உத்தியோகத்தர்களும் பிரதேசவாசிகளும் உதவியுள்ளனர்.
இதனையடுத்து அவர் மேலதிக மருத்துவ கவனிப்புக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குடியேற்றவாசிகளை அடையாளம் கண்டு பதிவுசெய்வதற்கான முதலாவது நிலையத்தை எதிர்வரும் 10 நாட்களுக் குள் திறப்பதாக கிரேக்கம் உறுதியளித்திருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்நாடு ஒவ்வொரு இரு மாதங்களுக்கு ஒரு தடவையும் 10,000 குடியேற்ற வாசிகளையும் அகதிகளையும் மீளக் குடி யமர்த்த எதிர்பார்த்துள்ளது.