ஓநாய் ஆர்வலர்கள் புதிய கின்னஸ் சாதனை: முந்தைய சாதனை முறியடிப்பு!!

507

howlers464_002பிரித்தானியாவில் ஓநாய் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு தங்களது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்க ஓநாய் போன்று ஊளையிட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.பிரித்தானியாவில் உள்ள லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் இந்த விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஓநாய் விரும்பிகள் 464 பேர் ஒன்று திரண்டு ஒரே வார இறுதியில் அதிகம் பேர் ஊளையிட்டதற்கான கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.குறிப்பிட்ட நிமிடத்துக்கு இவர்கள் அனைவரும் தொடர்ந்து ஓலமிட்டு அந்த நகரையே மிரட்டியுள்ளனர்.

இந்த சிறப்பு சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் பலர் தங்களுக்கு விருப்பமான ஓநாய்களைப் போல அலங்காரத்துடன் வந்திருந்தனர்.இந்த மாத இறுதியில் வித்தியாசமான உடை அலங்காரங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை வரவேற்கும் விதத்திலும் இந்த சாதனை நிகழ்வு அமைந்துள்ளது.

முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் செயின்ட் க்ளவுட் பல்கலைக்கழகத்தில் 296 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஊளையிட்ட சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.