17 வயது மாணவி ஓடையில் விழுந்து பலி!!

970

265762172dead-girl2கட்டுகஸ்தொட்ட, நித்யவல பிரதேசத்தில் பாதை ஓராமாக சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் பாதை அருகில் இருந்த ஓடையில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 5.35 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓடையில் விழுந்த மாணவி நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கட்டுகஸ்தொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கட்டுகஸ்தொட்ட, மடவளை பிரதேசத்தை சேர்ந்த 17வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.