இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் களின் உறவினர்களின் பெயர்களில் வெளிநாடுகளின் வங்கிகளில் பல பில்லியன் ரூபா கணக்குகள் உள்ளன. அவற்றை முடக்கி அந்த பணத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணை நடத்தப்படு கின்றது. அதன் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்றும் அவர் கூறினார். எவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் விரைவான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள் ளார். அதன்படி விசாரணைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.