இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வவுனியாவில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று(16.10) வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பிரஜைகள் குழுவின் தலைவர் தேவராசா, வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்,
வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன்,எம்.பி.நடராஜ், எம்.தியாகராசா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வன்னி அமைப்பாளர் எஸ்.கோவிந்தராஜ், புதிய மாக்கிசிஸ லெனினிசக்கட்சியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள்,
அரசியல் கைதிகளின் பெற்றோர், காணாமல் போனோரின் பெற்றோர் உள்ளிட்டோர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், முற்சக்கர வண்டி உரிமையாளர்கள், வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.