வவுனியா அருளகம் சிறுவர் இல்லத்துக்கு வடமாகாண உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனால் போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு(படங்கள்)

747

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவில் அனுசரணையுடன் இயங்கும்  அருளகம் சிறுவர் இல்லத்துக்கு  வடமாகாண சபை உறுப்பினர் திரு.ஜீ.ரி.லிங்கநாதன் அவர்களது குறித்தொதுக்கபட்ட நிதியிலிருந்து போட்டோ பிரதி இயந்திரம்(photo copier) ஒன்று அருளகம் சிறுவர் இல்ல நிர்வாகத்தினரின் வேண்டுகோளின்பேரில்  வழங்கபட்டது.

மேற்படி போட்டோ பிரதி  இயந்திரம் வழங்கும் நிகழ்வானது நேற்று  16.10.2015  வெள்ளிகிழமை சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் முதியோர் தின விழாவின் போது வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலின் நிர்வாக உறுப்பினர்களிடம் கையளிக்கபட்டது .மேற்படி நிகழ்வில் வடமாகாண சுகாதார  அமைச்சர் ப .சத்தியலிங்கம் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

DSC_0178 DSC_0180 DSC_0182 DSC_0184 DSC_0190