இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 06 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.
முதல் இன்னிங்ஸில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 484 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 251 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 227 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 79 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி இலங்கை அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது